தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

Header Ads Widget

இலங்கை கிரிக்கேட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட போட்டித் தடை நீக்கம்!

 

எமது இலங்கை கிரிக்கெட் வீரரான தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட போட்டித் தடை நீக்கப்பட்டதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கை கிரிக்கெட் வீரரான தனுஷ்க குணதிலக்க கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நியூ சவுத் வேல்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து  2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 3 ஆம் திகதி அவர் இலங்கை திரும்பினார். 

கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்திற்கான தேசிய அணியில் இடம்பெற்ற தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலிய பயணத்தின் போது அவர் கைது செய்யப்பட்டதையடுத்து இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாகக் குழு தனுஷ்க குணதிலக்கவுக்கு கிரிக்கெட் போட்டித் தடை விதித்தது!

இதனையடுத்து 2023 ஆம் ஆண்டு செப்படெம்பர் மாதம் அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் அவர் குற்றமற்றவர் என வழக்கின் நிறைவில் உத்தரவிட்டது.

தனுஷ்கவின் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நியமித்த மூவரடங்கிய குழு தனுஷ்கவை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்குமாறு சிபாரிசு செய்திருந்த நிலையில், தனிஷ்கவின் தடையை நீக்குவதற்கு ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவன செயற்குழு 2023 ஒக்டோபர் 13 ஆம் திகதியன்று நடவடிக்கை எடுத்திருந்ததாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.