தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

Header Ads Widget

நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதி ஒதுக்கீடு!

இலக்கையில் தற்போது பெய்து வரும் கன மழை காரணமாக பெரும் பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம் 100,000 யூரோக்களை ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த நிதி ஒதுக்கீடானது சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் (IFRC) பரிந்துரையின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ, தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் பாதிக்கப்பட்ட சுமார் 15,000 பேருக்கு இந்த உதவி பயனுடையதாக அமையும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது .

குறித்த ஒதுக்கீடானது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்களை வழங்குதல் , மருத்துவ முகாம்களை அமைத்தல் , அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தல் , வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை சுத்தம் செய்தல் ஆகியவற்றிற்கு பயனுள்ளதாக அமையும்.

இலங்கையின் தெற்குப் பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் பருவ மழை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவினால் 13 மாவட்டங்களில் 75,000 க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் .

காலி, கம்பஹா மற்றும் மாத்தறை போன்ற மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பெரும்பாலான பகுதிகள் ஒரு வாரத்திற்கும் மேலாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது!