தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

Header Ads Widget

வாகனத்தை மதுபோதையில் செலுத்துபவர்களை கைது செய்யும் பொலிஸாருக்கு 5,000 ரூபா!

 



வாகனம் செலுத்தும்போது மது போதையில் சாரதிகள் இருக்கும் சந்தர்ப்பத்தில் கைது செய்யும் ஒவ்வொரு பொலிஸாருக்கும் 5,000 ரூபாவை  வழங்கும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்த போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது.

இந்த திட்டம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி  வரை செயற் படுத்தப்படும், இந்தக் காலகட்டத்தில், மதுபோதையில் வாகனம்  செலுத்தும் ஒருவரை கைது செய்யும் பொலிஸ உத்தியோகத்தருக்கு அவரது சம்பளத்தில் 5,000 ரூபாவை கூடுதல் கொடுப்பனவாகவும் வழங்கப்படும்.  என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹபுகொட தெரிவித்தார்.

அதிகாரிகளை ஊக்குவிக்கவும் விபத்துகளைத் தடுக்கவும் இந்த முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டதாக பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.