தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

Header Ads Widget

iPhone 16 Leak பெரிய டிஸ்பிளே, புதிய கேமரா மற்றும் அதிநவீன சிப்செட்டுடன் ஐபோன் 16! புதிய லீக் தகவல்கள்!

ஒவ்வொரு ஆண்டும் புதிய ஐபோன் வெளியாகும் போது அதன் முந்தைய பிராண்டின் விலை குறைவதோடு சேர்த்து அதற்கு அடுத்த பிராண்டின் சிறப்பம்சங்கள் என்ன என்ற தகவல்களும் இணையத்தில் உலாவ ஆரம்பித்து விடும். அதே போலவே இந்த முறையும் ஐபோன் 15 வெளியாகி ஒரு மாதமே ஆகியிருக்கும் நிலையில் ஐபோன் 16 மொபைல் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

டெக் வல்லுநர் Jeff Pu அளித்துள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2024ம் ஆண்டு வெளியாகவுள்ள ஐபோன் 16 மொபைலின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அதன்படி, ஐபோன் 16 மொபைலில் முந்தைய மாடலை விட பெரிய டிஸ்பிளே மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபோன் 16 டிஸ்பிளே!


புதிய தகவல்களின்படி, ஐபோன் 16 மொபைலில் முந்தைய மாடலை விட பெரிய 6.3 மற்றும் 6.9 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்பிளே இடம்பெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஐபோன் 15 மாடல்களில் 6.1 மற்றும் 6.7 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்பிளேக்கள் இடம்பெற்றுள்ளது.

ஐபோன் 16 கேமர!


ஐபோன் 16 ப்ரோ மொபைல்களில் சிறந்த ஜூம் வசதிகளுக்காக 12 மெகாபிக்ஸல் tetra-prism லென்ஸ் மற்றும் 48 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் கேமரா இடம்பெறலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஐபோன் 15 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் ஆகிய இரண்டு மொபைல்களிலும் OIS வசதியோடு கூடிய 48MP + 12MP +12MP கேமரா இடம்பெற்றிருந்தது.

ஐபோன் 16 சிப்செட்!
சமீபத்தில் வெளியாகியுள்ள ஐபோன் 15 மாடலில் A16 பயோனிக் சிப் மற்றும் ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் உலகின் மிக வேகமான A17 Pro சிப்செட் பொறுத்தப்பட்டுள்ளது. இதே ஐபோன் 16 சீரிஸ் மாடல்களில் A17 Pro மற்றும் A18 Pro சிப்செட் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் 16 குறித்த இதர தகவல்கள்!
ஐபோன் 16 ப்ரோ மொபைல்களில் Wi-Fi 7 கனெக்ட்டிவிட்டி மற்றும் ஐபோன் 16 மொபைல்களில் Wi-Fi 6E கனெக்ட்டிவிட்டி இடம்பெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த மொபைல்களில் Qualcomm-ன் லேட்டஸ்ட் செல்லுலார் மோடம் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது!