தொடர்ந்தும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையில் நடந்து வரும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்துவதில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இந்தநிலையில், இஸ்ரேல் போர் விமானம் மத்திய காசா மீது மற்றுமொரு பாரிய தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக 20இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
போரில் உயிரிழந்தவர்கள்
ஹமாஸ் - இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை இஸ்ரேலில் 1,402 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4,475 பேர் காயம் அடைந்துள்ளனர்.
காசாவில் 3,488 பேர் உயிரிழந்துள்னளர், 12 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர், சுமார் 1,500 ஹமாஸ் அமைப்பினர் கொலை செய்யப்பட்டுள்ளதாவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்கு கரையில் 65 பேர் உயிரிழந்துள்ளனர், 1,300 பேர் காயம் அடைந்துள்ளனர். லெபனானில் 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது!