தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

Header Ads Widget

அனைத்து உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்வு!

இஸ்ரேலில் நடந்த தாக்குதல்கள் உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. நாங்கள் இஸ்ரேலுடன் துணை நிற்கிறோம் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.  

இந்தநிலையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போரில் பலியானோர் எண்ணிக்கை 4,200ஐ கடந்துள்ளதாக இறுதியாக கிடைத்துள்ள தரவுகளில் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்கள்!

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,400 பேரும், பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2,808 பேரும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்  தெரிவித்துள்ளன.

இதேவேளை, இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 41 நாடுகளை சேர்ந்தவர்கள் உயிரிழப்பு மற்றும் காணாமல் போயுள்ளதாக இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில், 105 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 103 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் இது ஹமாஸூக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான போர் மட்டுமல்ல, இது உலகளாவிய போர் என்றும் இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சகம் மேலும் கூறியுள்ளது!