களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி – பொறுகாமம் பகுதியிலுள்ள குளமொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவின் பொறுகாமம் பகுதியிலுள்ள குளக்கரையை அண்டிய நீர்ப்பகுதியிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பெரியகல்லாறு பகுதியைச் சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தரான கிருபைராஜா நிலக்சன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கிராம மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் கிராம சேவகர், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெ டுத்தனர்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி குளத்திலிருந்து சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைகளை முன்னெடுக்க உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பான மேல திக விசாரணைகளை களு வாஞ்சிக்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்!