தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

Header Ads Widget

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்த்தாலையடுத்து கொக்கட்டிச்சோலை அனைத்து வர்த்தக நிலையங்கள் முடக்கம்!!


மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்த்தாலையடுத்து கொக்கட்டிச்சோலை  அனைத்து வர்த்தக நிலையங்கள், பொதுசந்தைகள் மூடப்பட்டு போக்குவரத்து இன்றி வீதிகள் வெறிச்சோடி மாவட்டத்தில் அனைத்து நிர்வாக செயற்பாடுகளும் இன்று(வெள்ளி) முடங்கியுள்ளது.

எமது தாயகமான வட கிழக்கு மாகாணங்களில் எமது பெரும்பான்மைப் பலத்தை சிதைத்ததை
ஒன்றிணைந்து ஹர்த்தாலுக்கு இன்று அழைப்பு விடுத்தனர்.
இதனையடுத்து இன்று மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேசங்களிலும் வர்தக நிலையங்கள் மற்றும் பொது சந்தைகள் முற்றாக மூடப்பட்டுள்ளன.

இருப்பை பலவீனப்படுத்தி, உரிமை கோரி நாம் எழுந்து நிற்க முடியாத நிலைமையை காலப்போக்கில் ஏற்படுத்தும் இலக்குடன். அரசாங்க மட்டத்திலும் தன் ஆதரவோடும் பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எமது தாயகத்தில், வரலாற்று ரீதியாக எமது வழிபாட்டு தலங்கள் அமைந்திருந்த பல்வேறு

இடங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு

எதிராக நீதிமன்றங்கள் வழங்கிய கட்டளைகள் மீறப்பட்டுள்ளன.

முல்லைத்தீவில் குருந்தூர்மலை, திருகோணமலையில் கன்னியா மற்றும் விளையாட்டரங்க சுற்றாடல், யாழ்ப்பாணத்தில் தையிட்டி ஆகிய இடங்களில் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

குருந்தூர்மலையிலும், தையிட்டியிலும் பௌத்த விகாரைகள் கட்டப்பட்டுள்ளன. திருகோணமலையில் -

இலுப்பைக்குளத்தில், விகாரை ஒன்றுக்கான முன் நடவடிக்கைகள். ஆளுநரின் கட்டளையையும் மீறி,

மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொல்பொருள் திணைக்களம். வனத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் என்பன எமது பெருந்தொகையான காணிகளை ஆக்கிரமித்து அபகரித்துள்ளன. காணிகள் மீளக் கையளிக்கப்படும் என்று அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

இதேவேளையில், மட்டக்களப்பு மாவட்டத்தில், மயிலத்தமடு -மாதவனை பிரதேசத்தில் தமிழ்ப் பண்ணையாளர்களின் பல்லாயிரக்கணக்கான கால் நடைகளின் மேய்ச்சல் தரவையாக மிக நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வந்த பாரிய பிரதேசத்தை, சிங்களக் குடியேற்ற வாசிகள் ஆக்கிரமித்து பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்ப் பண்ணையாளர்களின் கால் நடைகள் ஆக்கிரமிப்பாளர்களால் பெருந்தொகையில் பிடிக்கப்பட்டும். சுடப்பட்டும். கொல்லப்பட்டும் உள்ளன. இதனால் பண்ணையாளர்களின் வாழ்வே இருண்டு போய் உள்ளது.

பயிர் அறுவடை முடிந்தவுடன் குடியேற்ற வாசிகள் வெளியேறி விடுவார்கள் என்று அரசாங்கத் தரப்பில் கடந்த வருடம் கொடுக்கப்பட்ட வாக்குறுதி காற்றோடு கலந்து போய் பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆக்கிரமிப்பு தொடர்கின்றது.

மேலும் பலதரப்பட்ட உரிமைகளை மீட்க்கவும் இன்றைய ஹர்த்தல் அனுஷ்டிக்கப் படுகின்றது..!