தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

Header Ads Widget

தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை நெருங்கிய நெதர்லாந்து 2023 உலகக் கிண்ணத்தில் மிகப் பெரிய தலைகீழ் முடிவு!

தரம்சாலா, இமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற உலகக் கிண்ண 15ஆவது லீக் கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்காவை 38 ஓட்டங்களால் வெற்றிகொண்டு வரலாறு படைத்தது நெதர்லாந்து!

இந்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மிகப் பெரிய தழைகீழ் முடிவாக இது அமைந்தது.  

இந்த வெற்றியைக் கொணடாடும் வகையிலும் இரசிகர்களுக்கு நன்றி தெரிவுக்கும் வகையிலும் நெதர்லாந்து வீரர்கள் மைதாநத்தைச் சுற்றிவந்தனர்.

இந்த உலகக் கிண்ண வெற்றியுடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்காவை நெதர்லாந்து வெற்றிகொண்டது இதுவே முதல் தடவையாகும்.

கடந்த வருடம் நடைபெற்ற இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியிலும் தென் ஆபிரிக்காவை நெதர்லாந்து வெற்றிகொண்டிருந்தது.

மிகவும் இக்கட்டான வேளையில் அணித் தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் வெளிப்படுத்திய அதிரடி துடுப்பாட்டம், அவரது அணி வீ:ரர்களின்சிறப்பான பந்துவீச்சுகள், திறமையான களத்தடுப்புகள் ஆகியவற்றின் உதவியுடன் தென் ஆபிரிக்காவை நெதர்லாந்து மண்கவ்வச் செய்தது.

இந்தியாவில் நடைபெற்றுவரும் 13ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் சாதனைகளுடன் அபார ஆற்றல்களை வெளிப்படுத்தி முதல் 2 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளை ஈட்டிய தென் ஆபிரிக்கா தனது முதலாவது தோல்வியை இணை உறுப்பு நாடான நெதர்லாந்திடம் தழுவியது.

இப் போட்டி முடிவை அடுத்து இந்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் இந்தியா, நியூஸிலநர்து ஆகிய அணிகள் மாத்திரமே தோல்வி அடையாத அணிகளாக இருக்கின்றன.  

மழை காரணமாக தாமதமாக ஆரம்மான அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நெதர்லாந்து நிர்ணயிக்கப்பட்ட 43 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 245 ஓட்டங்களைக் குவித்தது.

நெதர்லாந்து ஒரு கட்டத்தில் 82 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் பின்னர் 112 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் கடைசியாக 140 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களையும் இழந்து பெரும் தடுமாற்றததை எதிர்கொண்டது.

முதல் 27 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 112 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்த நெதர்லாந்து எஞ்சிய 16 ஓவர்களில் மெலும் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 133 ஓட்டங்களைக் குவித்தது.

ஆட்டம் இழந்த முதல் 6 வீரர்களில் 6ஆம் இலக்க வீரர் டேஜா நிடாமனுரு 20 ஓட்டங்களை அதிகப்பட்சமாக பெற்றிருந்தார்.

அதுவரை சிப்ராண்ட் எங்க்ள்ப்ரெச், டேஜா நெடமனுரு ஆகிய இருவர் 5ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 32 ஓட்டங்களே சிறந்த இணைப்பாட்டமாக இருந்தது.

இந் நிலையில் வீழ்ச்சியிலிருந்து மீள அதிரடியே உகந்தது என்பதை அறிந்த அணித் தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் தனி ஒருவராக தென் ஆபிரிக்க பந்துவீச்சாளர்களைப் பிரமிக்கவைத்தார்.

தென் ஆபிரிக்க பந்துவீச்சாளர்கள் அனைவரையும் சுழற்றி அடித்த ஸ்கொட் எட்வேர்ட்ஸ் 69 பந்துகளில் 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 78 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழக்காதிருந்தார்.

இதனிடையே 8ஆவது விக்கெட்டில் லோகன் வென் பீக் உடன் 41 பந்துகளில் 64 ஓட்டங்களை ஸ்கொட் எட்வேர்ட்ஸ் பகிர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து ஏரியன் டட்டுடன் இணைந்து பிரிக்கப்படாத 9ஆவது விக்கெட்டில் மேலும் 41 ஓட்டங்களை எட்வேர்ட்ஸ் பகிர்ந்தார்.

ரோலோவ் வென் டேர் மேர்வ் 29 ஓட்டங்களையும் ஏரியன் டட் ஆட்டம் இழக்காமல் 23 ஓட்டங்களையும் பெற்றனர்.

உதிரிகளாக 32 ஓட்டங்கள் நெதர்லாந்துக்கு கிடைத்தது.

பந்துவீச்சில் மாக்கோ ஜென்சென் 27 ஒட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கெகிசோ ரபடா 56 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லுங்கி ங்கிடி 57 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

நெதர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 246 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 42. ஓவர்களில் சகல  விக்கெட்களையும் இழந்து 205 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

முதல் 2 போட்டிகளில் அசத்திய குவின்டன் டி கொக், ஏய்டன் மார்க்ராம், ரெசி வென் டேர் டுசென் ஆகியோர் நெதர்லாந்துடனான போட்டியில் பிரகாசிக்கத் தவறினர்.

மத்திய வரிசை வீரர்கள் நால்வர் 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றிராவிட்டால் தென் ஆபிரிக்கா மிகவும் மோசமான தோல்வியைத் தழுவியிருக்கும்.

தென் ஆபிரிக்காவின் இன்னிங்ஸில் ஹென்றிச் க்ளாசன், டேவிட் மில்லர் ஆகியோர் 5ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 45 ஓட்டங்களே அதிசிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து ஜெரால்ட் கொயெட்ஸீயுடன் 7ஆவது விக்கடெடில் மேலும் 36 ஓட்டங்களைப் பகிர்ந்த டேவிட் மில்லர் 43 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

அவர் ஆட்டம் இழந்ததும் தென் ஆபிரிக்காவுக்கு இருந்துவந்த கொஞ்ச எதிர்பார்ப்பும் அற்றுப்போனது.

மில்லரைவிட 9ஆம் இலக்க வீரர் கேஷவ் மகாராஜ் 40 ஓட்டங்களையும் க்ளாசென் 28 ஓட்டங்களையும் ஜெரால்ட் கொயெட்ஸீ 22 ஓட்டங்களையும் முன்வரிசையில் குவின்டன் டி கொக் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

கடைசி விக்கெட்டில் மஹாராஜ், ங்கிடி ஆகிய இருவரும் 44 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

பந்துவீச்சில் லோகன் வென் பீக் 60 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரோலோவ் வென் டேர் மேர்வ் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாஸ் டி லீட் 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் போல் வென் மீக்கரன் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்!