தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

Header Ads Widget

மாணவர்களுக்கு நிலைபேறான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுகும் SLT-Mobitel

 



சமூகத்திலும் சூழலிலும் நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் அங்கமாக, SLT-MOBITEL, கம்பளை, ஜினராஜ மகா வித்தியாலயத்தில் சூழல், சமூக, ஆளுகை (ESG) நடவடிக்கைகளை முன்னெடுத்தது

இந்த நிகழ்ச்சியில் மூன்று திட்டங்கள் அடங்கியிருந்ததுடன், பல பெறுமதி வாய்ந்த பங்காளர்களுடன் SLT-MOBITEL கைகோர்த்து, அந்த சமூகத்தில் நீடித்து நிலைத்திருக்கும் தாக்கத்தையும், நிலைபேறான அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்வதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

செயற்திட்டங்களில் STEM (விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) தொடர்பான கல்வி விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுப்பது, மாணவர் தொழில்முயற்சியாண்மையை ஏற்படுத்துவது, “மனமிருந்தால் புத்தகமொன்றை வழங்குங்கள்” எனும் தொனிப்பொருளில் புத்தக நன்கொடைத் திட்டம் வாசிப்பு கலாசாரத்தை மேம்படுத்தும் வகையிலும், ஒகில்வி பொது உறவுகள் ஸ்ரீ லங்கா உடன் இணைந்து மர நடுகைத் திட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது!