தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

Header Ads Widget

இன்றும் மழையுடனான வானிலை தொடரும்!

இன்றும் நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

மேற்கு, வடமேற்கு, தெற்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான மழை பெய்யக்கூடும்.

மேற்கு, தென், வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது!