தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

Header Ads Widget

தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழமுக்கம்!

தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நேற்று வெள்ளிக்கிழமை (20 -10-2023) காலை காற்றழுத்த தாழமுக்கம் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட தகவலில், மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழமுக்கம் அக்டோபர் 23ஆம் திகதியன்று வலுப்பெற வாய்ப்புள்ளது.

பலத்த காற்று  வீசக்கூடும்

இதன் காரணமாக தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். அத்துடன் காற்றானது தென்கிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

மேலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்தாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது!