அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு பேச்சாளர் ஜோன் கிர்பி இதனை தெரிவிக்கையில் காசா மருத்துவமனையின் அடியில் ஹமாசின் கட்டளைப்பீடம் உள்ளதாக புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மருத்துவமனையின் அடியில் ஆயுதங்களை மறைத்துவைத்திருந்த ஹமாஸ் அங்கிருந்தே இஸ்ரேலின் மீது தாக்குதல்களை திட்டமிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் மருத்துவமனையின் கீழ் உள்ள சுரங்கங்களில் இருந்து செயற்படுகின்றது என இஸ்ரேல் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக அமெரிக்கா தகவல்களை வெளியிட்டுள்ளமை இதுவே முதல்தடவை.
எனினும் ஹமாஸ் இதனை நிராகரித்துள்ளது.
அமெரிக்காவிடம் பல்வேறுதரப்பினரிடமிருந்து பெறப்பட்ட புலனாய்வு தகவல்கள் உள்ளன அவை இதனை உறுதி செய்கின்றன என குறிப்பிட்டுள்ள கிர்பி ஹமாசும் இஸ்லாமிக் ஜிகாத்தும் மருத்துவமனைக்கு கீழே உள்ள சுரங்கப்பாதைகளில் ஆயுதங்களையும் பணயக்கைதிகளையும் மறைத்துவைத்துள்ளன என தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் உறுப்பினர்கள் மக்களுடன் கலந்துள்ளதால் இஸ்ரேலின் இந்த நடவடிக்கை சவாலானது என அவர் தெரிவித்துள்ளார்!