மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதியில் வர்த்தக நிலையங்கள் மீது தீப் பரவியதில் புடவைக் கடை உட்பட மூன்று கடைகள், வாகனங்கள் கழுவும் இடம் என்பன எரிந்து நாசமாகியுள்ளதுடன், வாகனங்களும் எரிந்து முற்றாக சாம்பலாகியுள்ளன.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (07) 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் தீ அணைக்கும் படையினர் இராணுவத்தினர் பொது மக்கள் இணைந்து தீ யை அணைத்த போதிலும் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளன.
தீபரவலுக்கான காரணம் கண்டறியப் படாத நிலையில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்!