தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

Header Ads Widget

புதிய ஆக்கப் படைப்புகள் போட்டியில் சாதித்த, முனைக்காடு, கன்னங்குடா, போன்ற மேலும் பல பாடசாலைகள் மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் அடங்கும்!


கல்வி அமைச்சினால் நடத் தப்படுகின்ற அகில இலங்கை பாடசாலை ரோபோ தொழில் நுட்பம் மற்றும் புதிய ஆக்கப் போட்டித் தொடரின் கிழக்கு மாகாண பாடசாலை மாணவர் களுக்கிடையிலான மாகாண மட்ட போட்டி மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் இடம்பெற்றது.

இதில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பல பாடசாலை மாண வர்களின் கண்டுபிடிப்புக்கள் போட்டிக்காக சமர்ப்பிக்கப்பட் டன.

தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சியடையும் இச் சூழ்நிலை யில் உலகம் ரோபோ தொழில் நுட்பம் புதிய கண்டுபிடிப்புக் களை நோக்கி நகர்ந்துகொண்டி ருக்கும் நிலையில் இத்துறைசார்ந்த அறிவு. திறன், நுட்பங்களை மாணவர்களிடம் வளர்த்தெடுத்து எதிர்கால வேலை உலகிற்கு மாணவர்களை தயார்ப்படுத்தும் நோக்கில் கல்வி அமைச்சானது இப் போட்டியினை வருடா வரு டம் நடத்துகின்றது.

குறிப்பாக இப் போட்டித்தொடரானது ரோபோ தொழில் நுட்பம் தொடர்பான பிரிவு மற்றும் புதிய கண்டுபிடிப்புக் கள் தொடர்பான பிரிவு என் கின்ற இரண்டு பிரிவுகளில் உற் பத்தித்தொழில் மற்றும் சுற்றுச் சூழல் கல்வித்துறை, கல்வித் துறை, பொறியியல் தொழில்நுட் பம் மற்றும் உற்பத்தித்துறை, பொழுதுபோக்குத்துறை, சுகா தார மற்றும் மருத்துவ அறிவி யல் துறை என 5 துறைகளின் கீழ் நடத்தப்படுகிறது.

நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கி டையிலான போட்டியில் மட் டக்களப்பு மேற்கு கல்வி வல யத்தை சேர்ந்த 8 மாணவர்கள் பங்கு பற்றி இருந்ததுடன் அதில் மட்டக்களப்பு, மண்முனை மேற்கு கன்னங்குடா மகா வித்தி யாலய மாணவன் என்.கிரோ ஜன் புதிய கண்டுபிடிப்புக்கள் பிரிவில் சுகாதார மற்றும் மருத் துவ அறிவியல் துறையில் போட் டியிட்டு முதலாவது இடத்தை பெற்றுக்கொண்டுள்ளதுடன், மட்டக்களப்பு,மண்முனை

மேற்கு வவுனதீவு பரமேஸ்வரா வித்தியாலய மாணவன் கே.கவிராஜ் ரோபோ தொழில்நுட் பம் தொடர்பான பிரிவில் கல் வித்துறையில் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டனர்.

அத்தோடு மண்முனை மனைக் காடு மேற்கு விவேகானந்த மகா வித்தியாலய மாணவன் கே. டிபாணுஜன் புதிய கண்டுபி டிப்புக்கள் பிரிவில் பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத் தித்துறையில் 3 வது இடத்தை பெற்றுக்கொண்டுள்ளதோடு முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலய மாணவன் கே.கபி லாஸ் புதிய கண்டுபிடிப்புக்கள் பிரிவில் உற்பத்தித்தொழில் மற்றும் சுற்றுச்சூழல் கல்வித்து றையில் போட்டியிட்டு மெரிட் சான்றிதழையும் மகிழவட்டுவான் மகா வித்தியாலய மாணவன் பீ. ஜரோட்சன் ரோபோ பிரிவில் சுகாதார மற்றும் மருத்துவ அறி வியல் துறையில் மெரிட் சான் றிதழையும் பெற்றதோடு 3 மாண வர்களுக்கு திறமைக்கான சான்றிதழும் வழங்கப்பட்டது!