இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டனயாகு காசாவை ஆக்கிரமிக்கவோ அல்லது கைப்பற்றவோ ஆட்சிபுரியவோ நினைக்கவில்லை என பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.
எனினும் ஹமாசை தோற்கடித்த பின்னர் காசாவிலிருந்து தீவிரவாத அச்சுறுத்தல்கள் எழுவதை தடுப்பதற்காக காசாவிற்குள் படையணியொன்று நுழைவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிவில் நிர்வாகமொன்று அவசியம் என குறிப்பிட்டுள்ள அவர் ஒக்டோபர் ஏழு தாக்குதல் போன்ற ஒன்று இடம்பெறாததை மீண்டும் உறுதி செய்யவேண்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
காசாவின் பாதுகாப்பிற்கு இஸ்ரேலே பொறுப்பு என இஸ்ரேல் பிரதமரின் கருத்திற்கு அமெரிக்கா கடும் கண்டனம் வெளியிட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு பொக்ஸ் நியுசிற்கு தெரிவித்துள்ளார்!