தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

Header Ads Widget

இலங்கை அணியின் மிகப்பெரிய படுதோல்வியால்- இலங்கை வர்ணணையாளர்கள் கடும் வேதனை!

இவ் ஆண்டி 2023 உலக கிண்ணத்தொடரில் இலங்கை இந்தியாவிற்கு எதிரான போட்டியில் படுதோல்வியடைந்தது குறித்து இலங்கையை சேர்ந்த வர்ணணையாளர்கள் அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் வெளியிட்டுள்ளனர்.

இலங்கை அணி உலககிண்ணப்போட்டிகளில் ஏனைய அணிகள் பெற்ற மிகக்குறைந்த ஒட்டங்களை விட அதிக ஓட்டங்களை பெற்றதே இந்தியாவிற்கு எதிரான போட்டியில் சாதிக்கப்பட்ட ஒரேயொரு சாதகமான விடயம் என வர்ணணையாளர் ரொசான் அபயசிங்க தெரிவித்துள்ளார்.

கொவிட்- இலங்கை வங்குரோத்து நிலை - இலங்கை கிரிக்கெட்;டின் வீழ்ச்சி போன்றன என்னுடைய காலத்திலேயே இடம்பெற்றன என நினைக்கும்போது மிகவும் வேதனையாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை விட தெரிவிப்பதற்கு  எதுவுமில்லை சொல்லப்போனால் மிகவும் மறக்க முடியாத நாள் இது  எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணி துடுப்பாடிய விதத்தை பார்த்தபோது கவலையும் காயமும் ஏற்பட்டது என இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை வீரர் பர்வேஸ் மகரூவ் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சர்வதேச தரத்தில் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்

அனைத்து இலங்கை வீரர்களிற்கும் எனது வேண்டுகோள் - உங்கள் கௌரவத்திற்காகவும் இலங்கையின் கௌரவத்திற்காகவும் விளையாடுங்கள் மீண்டும் சிறப்பாக விளையாடி சம்பியன்ஸ் கிண்ணத்திற்குதகுதி பெறுங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்!