தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

Header Ads Widget

மதுபானசாலை விற்பனை நிலையங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க வேண்டும் - டயானா கமகே!


2024 வரவு - செலவுத் திட்ட முன்மொழிவில் மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கும் நேரம் குறித்த அறிவிப்பில் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே.

மதுபானக் கடைகள் மற்றும் மதுபானசாலைகளுக்கு அதிக நேரம் திறந்திருக்கும் முறைமையை அறிமுகப்படுத்துவதற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வரவேற்றுள்ளார். நேற்று திங்கட்கிழமை (13) இடம்பெற்ற  2024 வரவு - செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியால் முன்மொழிவு செய்யப்பட்டதை குறித்து டயானா கமகே மகிழ்ச்சியடைந்துள்ளார்.

சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்வதை தடைசெய்யும் முகமாக மதுபான விற்பனை நிலையங்களுக்கு நெகிழ்வான நேரத்திற்கு திறந்திருக்கும் அட்டவணை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் 2024 வரவு செலவுத் திட்டத்தில் மென் மதுபான அனுமதிப்பத்திரத்திற்கான புதிய கொள்கையொன்றை திருத்துவது தொடர்பில் ஜனாதிபதியினால் முன்மொழியப்பட்டது.

இது தொடர்பில் டயானா கமகே ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,

ஜனாதியின் முன்மொழிவு குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இலங்கையில் சட்டவிரோதமான மதுபான விற்பனையை நிறுத்துவதற்கான நேரம் இது என்றும் கூறினார்.

மேலும் விற்பனை நிலையங்கள் மூடப்படும் நேரத்தை நீடிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் குறிப்பிட்டார்!