வருகின்ற ஆண்டு 2024 மே மாதத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே மாதத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் இறுத தீர்மானம் அறிவிக்கப்படுமாயின் ஐக்கிய தேசிய மக்கள் கூட்டணி என்ற பொதுக் கூட்டணியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யானை சின்னத்தில் போட்டியிடுவார் அரசாங்கத்தின் உயர் மட்ட தகவல் மூலம் தெரிவித்தது.
இதே வேளை பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதி தேர்தலுக்கான செலவீணங்கள் தொடர்பான அறிக்கையை தயாரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இதன் பிகாரம் பாராளுமன்ற, ஜனாதிபதி, மாகா சபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்குமான தேர்தல்கள் குறித்து முழுமையான நிதி அறிக்கை அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதி ஆணையாளர் எஸ். அச்சுதன் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தலை அடுத்த ஆண்டு நடாத்துவதற்கான தீர்மானத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவு - செலவு திட்ட உரையின் போது உத்தியோகப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி அரசாங்கத்தில் பல்வேறு களந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. நாட்டு மக்களின் ஆதரவை ஓரணியில் நம்பிக்கையுடன் பெற்றுக்கொள்ள சமர்பிக்கப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடைக்கும் முக்கிய வாய்ப்பாகும்.
இதனை கருத்தில் கொண்டு 2024 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் ஜனாதிபதி தேர்தலையும் அதனை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலையும் நடத்துவது குறித்து அரசாங்கத்திற்குள் நீண்ட நாட்களாக பேச்சுக்கள் தொடர்ந்தன.
அடுத்த வருடம் முதலாவது காலாண்டில் உத்தேசிக்கப்பட்டுள்ள க.பொ.த உயர் தர மற்றும் சாதாரண தர பரீட்சைகளை கருத்தில் கொண்டு மே மாத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
வரவு - செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களுக்கான 10ஆயிரம் ரூபா வாழ்வாதார கொடுப்பனவு ஏப்ரல் மாத்தில் வழங்கப்படுகின்றமையினால் அதன் பலனும் ஜனாதிபதி ரணிலுக்கு கிடைக்கும்.
எனவே ஜனாதிபதி தேர்தலை 2024 ஆம் ஆண்டு இறுதி வரை காலம் கடத்தாது வருடத்தின் நடுப்பகுதியில் நடத்துவது பல்வேறு வகையில் அரசியல் நலன்களுக்கு வழிவகுக்கும் என்று ஜனாதிபதிக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு நிலையிலேயே மே மாத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான சூழல் குறித்து ஆராயப்பட்டுள்ளது. மறுபுறம் ஐக்கிய தேசிய கட்சியின் நிறைவேற்றுக் குழுவிலும் தேர்தல் குறித்து பேசப்பட்டுள்ளது. யனை சிண்ணத்தில் கூட்டணியில் களமிரங்குவது குறித்து நீண்டகால பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன. அதன் பிகாரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள ஜனாதிபதி ரணில் ஆதரவு தரப்பினைரை கூட்டணியில் இணைத்துக்கொள்வதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இதே வேளை பொதுஜன பெரமுவின் அதிருப்தி குழுவினரால் உருவாக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாபாவின் செயல்பாட்டு தலைமைத்துவத்திலான அரசியல் கூட்டணியை ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணிக்குள் இணைத்துக்கொள்வதற்கான பேச்சுக்கள் முக்கிய கட்டங்களில் உ;ளளன. குறிப்பாக அநுர பிரியதர்ஷன யாபா தலைமையிலான கூட்டணி அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் வகையிலேயே எதிர்வரும் ஜனவரி மாதம் தனது கன்னி சம்மேளனத்தையும் நடத்த உள்ளது.
2024 வரவு - செலவு திட்டத்தின் மீதான வாக்கெடுப்புடன் தேர்தலை இலக்கு வைத்து கட்சி தாவல்களும் அரசியல் மாற்றங்களும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வரவு - செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி தீர்மானத்தை அரசாங்கம் அறிவிக்கலாம் என்று அரசின் முக்கிய தகவல் மூலம் குறிப்பிட்டது!