புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலுள்ள இலங்கை தொழிலாளர்கள் மூலம் கடந்த ஒக்டோபர் மாதத்தில் 517.4 மில்லியன் டொலர் அந்நிய செலாவணி வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த ஒக்டோபர் மாதத்தில் 517.4 மில்லியன் டொலர் வெளிநாட்டு பணவனுப்பல் மூலம் கிடைக்கப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து இவ்வாண்டு ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் இவ்வாறு வெளிநாட்டு பணவனுப்பல் மூலம் 7.6 பில்லியன் டொலர் கிடைத்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.