தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

Header Ads Widget

ஜீமைல் கூகுள் அக்கவுண்ட் பாஸ்வேர்ட் மறந்து போச்சா? ரிக்கவர் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்!

நீங்கள் கூகுள் அக்கவுண்ட் பாஸ்வேர்ட் மறந்துவிட்டாலோ அல்லது ஜீமெயில் முகவரி நினைவில் இல்லாமல் போனாலோ உங்களது கூகுள் அக்கவுண்ட்டை எப்படி ரெக்கவர் செய்வது என்பது குறித்த வழிமுறைகளை இங்கு தெரிந்துகொள்ளுவோம்.

உங்களது கூகுள் அக்கவுண்ட்டில் லாகின் செய்ய முடியாமல் போவது என்பது நம்மை எரிச்சல் அடைய செய்து, கோபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு விஷயமாக இருக்கும். குறிப்பாக கிட்டத்தட்ட எல்லாமுமே கூகுளில் இருக்கும் இந்த கால கட்டத்தில் கூகுள் அக்கவுண்ட்டில் லாகின் செய்ய முடியாமல் போவது நம்மை கோபப்படுத்தலாம்.

நல்ல வேலையாக நீங்கள் பயன்படுத்தி வரும் விலைமதிப்புள்ள சேவைகளான Gmail, Photos மற்றும் Google Play போன்றவற்றிற்கான அணுகலை மீண்டும் பெறுவதற்கு கூகுள் ஒரு சில அக்கவுண்ட் ரெக்கவரி செயல்முறைகளை வழங்குகிறது. இப்பொழுது உங்களது Google அக்கவுண்ட்டை ரெக்கவர் செய்வதற்கான படிப்படியான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.


ஒருவேளை உங்களது பாஸ்வேர்டை நீங்கள் மறந்து விட்டால்!

1.கூகுள் அக்கவுண்ட் ரெக்கவரி பேஜில் இருந்து நீங்கள் துவங்க வேண்டும்.

2.உங்களது இமெயில் முகவரியை வழங்கி (Gmail முகவரி) மற்றும் “Next” என்பதை கிளிக் செய்யவும்.

3.நீங்கள் கடைசியாக ஞாபகம் வைத்திருக்கக் கூடிய பாஸ்வேர்டை என்டர் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுவீர்கள். இதுவும் ஒரு வேலை உங்களுக்கு நினைவில் இல்லாத பட்சத்தில் நீங்கள் “Try another way” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

4.பிறகு உங்களது அடையாளத்தை உறுதி செய்வதற்கு கூகுள் ஒரு சில கேள்விகளை உங்களிடம் கேட்கும்.

5.இந்த கேள்விகளுக்கான பதிலை நீங்கள் துல்லியமாக கொடுக்க வேண்டும். ஒரு சில பதில்கள் கூறுவதில் உங்களுக்கு குழப்பம் இருந்தால் இந்த அக்கவுண்ட் ரெக்கவரி படிகளை நிறைவு செய்வதற்காக வழங்கப்பட்டு இருக்கும் சில குறிப்புகளை நீங்கள் பின்பற்றலாம்.

6. உங்களது அடையாளத்தை உறுதி செய்த பிறகு உங்கள் பாஸ்வேர்டை ரீசெட் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுவீர்கள்.

உங்களது கூகுள் அக்கவுண்ட் முகவரி உங்களுக்கு நினைவில் இல்லாத போது:

7. நீங்கள் வழக்கமாக சைன் இன் செய்யக்கூடிய இமெயில் அட்ரஸ் உங்களுக்கு ஞாபகத்தில் இல்லாத போது நீங்கள் கூகுள் அக்கவுண்ட் ரெக்கவரி பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

8. இப்போது “Forgot email?” என்ற லிங்கை கிளிக் செய்யுங்கள்.

9. உங்களது அக்கவுண்டுடன் தொடர்புடைய போன் நம்பர் அல்லது ரெக்கவரி இமெயில் முகவரியை உங்கள் அக்கவுண்டின் முழு பெயருடன் நீங்கள் வழங்க வேண்டும்.

10. உங்களது அடையாளத்தை உறுதி செய்வதற்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும். உங்கள் அக்கவுண்டுடன் பொருந்தக்கூடிய சில யூசர்நேம்களின் பட்டியலை கூகுள் உங்களுக்கு வழங்கும்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை  இங்கே கிளிக்  செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வேறு சில காரணங்களால் சைன் இன் செய்ய முடியாத போது:

மேலே கூறப்பட்ட காரணங்கள் தவிர வேறு சில காரணங்களால் உங்களால் கூகுள் அக்கவுண்டில் லாகின் செய்ய முடியாமல் போகும் பொழுது நீங்கள் கூகுளின் அதிகாரப்பூர்வ சப்போர்ட் சேனல்களின் உதவியை நாட வேண்டும்!