தீக்சன,நிசங்க,மென்டிஸ்,சமரவிக்கிரம, அசலங்க போன்ற வீரர்களை கொண்ட அணி எவ்வாறு இவ்வாறு மோசமாக விளையாடமுடியும் என இந்திய கிரிக்கெட் வர்ணணையாளர் ஹர்சா போக்லே கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை அணி 2023 உலக கிண்ணப்போட்டிகளில் மிக மோசமான தோல்விகளை சந்தித்து நாடு திரும்பியுள்ள இந்த தருணத்தில் கிரிக்கெட் வர்ணணையாளர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்
இலங்கை அணி பதிலளிக்க வேண்டிய பல கேள்விகள் உள்ளன நிசங்க, மென்டிஸ், சமரவிக்கிரம, அசலங்க தீக்சன போன்ற வீரர்களை கொண்ட அணி - எவ்வாறு இவ்வாறு மோசமாக விளையாடமுடியும் என ஹர்சா போக்லே கேள்வி எழுப்பியுள்ளார்.
என்னுடைய கருத்து வெளியிலிருந்து பார்ப்பவனின் கருத்து என்னுடைய கருத்து முற்றிலும் மிகச்சரியானதாக இல்லாமலிருக்கலாம்.
இடைக்காலம் என்ற வார்த்தை தொடர்ச்சியாக இருக்க முடியாது இலங்கை மீண்டும் எழுச்சி பெறும் என நினைக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்
இலங்கை அணியின் ஏமாற்றமளித்த உலககிண்ணதொடர் முடிவிற்கு வந்துள்ளது என தெரிவித்துள்ள வர்ணணையாளர் பர்வீஸ் மகரூவ் சிறந்த விளையாட்டிற்கான சாயல்கள் தென்பட்டாலும்போட்டித்தொடர் முழுவதும் அவர்கள் எதிர்பார்க்கப்பட்டதை விட மோசமாக விளையாடினார்கள் என பதிவிட்டுள்ளார்.
முன்னாள் வீரர் என்ற அடிப்படையில் தற்போதைய வீரர்கள் எங்களின் பாணியில் விளையாடுவார்கள் என்றே எதிபார்த்தேன் அவர்கள் ஏமாற்றி விட்டார்கள் என மஹரூவ் தெரிவித்துள்ளார்.
நீண்டகால குறுகிய கால இலக்குகளை முன்வைத்து சில கடுமையான முடிவுகளை எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்!