இடம்பெற்று வரும் இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் தாக்குதலில் மற்றுமொரு இலங்கையர் பலியாகியுள்ளாதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதியாகப் பிடிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சுஜித் பண்டார யட்டவர என்ற 48 வயதுடையவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேல் பொலிஸார் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
அடையாளம் காண முடியாத அளவில் சிதைந்திருந்த சடலம் அவரின் பிள்ளைகளின் டிஎன்ஏ மாதிரிகளின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்!