மயிலத்தமடு ஆர்ப்பாட்டம் குறித்த செய்திகளை வெளியிட்ட இரண்டு சுயாதீன ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு கவலை வெளியிட்டுள்ளது.
புண்ணியமூர்த்தி சசிகரன் வலசிங்கம் கிருஸ்ணகுமார் என்ற இரண்டு சுயாதீன ஊடகவியலாளர்களிற்கு எதிரான விசாரணைகளை அதிகாரிகள் உடனடியாக கைவிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான அவர்களின் செய்தியறிக்கையிடலிற்காக பழிவாங்கும் நோக்கில் இது இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர்கள் இடையூறுஇன்றி பணியாற்றுவதற்கு அனுமதிக்கப்படவேண்டும் என சிபிஜே வேண்டுகோள் விடுத்துள்ளது!