தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

Header Ads Widget

கெவுளியாமடு ஸ்ரீ கஜமுகப்பெருமான் ஆலய மஹா கும்பாவிஷேகமும்-ஸ்தாபிக்கப்படவுள்ள விநாயகப்பெருமானின் விக்கிரகம் ஊர்வலமும்!

 கெவுளியாமடு ஸ்ரீ கஜமுகப்பெருமான் ஆலய மஹா கும்பாவிஷேகமும்-ஸ்தாபிக்கப்படவுள்ள விநாயகப்பெருமானின் விக்கிரகம் ஊர்வலமும்!

கெவுளியாமடு கஜமுகப்பெருமான் ஆலய கும்பாவிஷேகத்தினை முன்னிட்டு நாளை 22.11.2023 ம் திகதி புதன்கிழமை அங்கு ஸ்தாபிக்கப்படவுள்ள விநாயகப்பெருமானின் விக்கிரகம் எமது ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளல் செய்யப்பட்டு கிராம ஆலயங்களை தரிசித்தவண்ணம் கெவுளியாமடு பதியை சென்றடையவுள்ளது.எனவே  அனைவரும் நாளை அதிகாலை 5.00மணிக்கு ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கு வருகைதருமாறும்  இறையன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்!

மேற்படி ஆலயம் தேசமகா சபை கூட்டத்தீர்மானத்திற்கு அமைவாக ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபையால் கெவுளியாமடு கஜமுகப்பெருமான் ஆலய பரிபாலன சபையின் பூரண ஒத்துழைப்புடனும் பங்குபற்றுதலுடனும் அமைக்கப்பட்ட ஆலயமாகும்!

கும்பாவிஷேகக் கிரிகைகள் யாவும்  2023.11.22  ஆரம்பமாகி

2023.11.23 எண்ணைக்காப்பும்

2023.11.24ம் திகதி கும்பாவிஷேகம் இடம் பெறும்

அனைவரும் வருகை தந்து ஸ்ரீ கஜமுக பெருமானின் இறை ஆசி பெற்ஏகுமாறு  இறையன்புடன் அழைக்கின்றனர்
ஆலய பரிபாலன சபை
 ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம் கொக்கட்டிச்சோலை