தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

Header Ads Widget

அஞ்சலோ மத்தியுஸ் ஆட்டமிழப்பு விவகாரம்-பங்களாதேஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கடும் அதிர்ச்சி- தனது அணியின் செயற்பாடு குறித்து கடும் விமர்சனம்

Angelo Mathews

எனது வாழ்நாளில் கிரிக்கெட் ஆட ஆரம்பித்தது முதல் நான் இவ்வாறான ஒரு விடயத்தை பார்க்கவில்லை பங்களாதேஸ் அணிக்கு எதிரான உலக கிண்ணப்போட்டியில் அஞ்சலோ மத்தியுஸ் ஆட்டமிழந்த முறை குறித்த சர்ச்சை தொடரும் அதேவேளை பங்களாதேஸ் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் அலன்டொனால்ட் அதிர்ச்சியும் ஏமாற்றமும் வெளியிட்டுள்ளார்.

அந்த ஆட்டமிழப்பு பங்களாதேசின் சிறப்பான ஆட்டத்திலிருந்து கவனத்தை திசைதிருப்பியுள்ளது என குறிப்பிட்டுள்ள அலன்டொனால்ட் நான் இன்னமும் அந்த ஆட்டமிழப்பு குறித்து அதிர்ச்சியடைந்துள்ளேன் இது தனிநபராக  ஒரு கிரிக்கெட் வீரராக நான் பின்பற்றும் விழுமியங்கள் தொடர்பானது எனவும் தெரிவித்துள்ளார்.

என்னுடைய வாழ்நாளில் கிரிக்கெட் ஆட ஆரம்பித்தது முதல் நான் இவ்வாறான ஒரு விடயத்தை பார்க்கவில்லை எனவும் அலன்டொனால்ட்  குறிப்பிட்டுள்ளார்.

நேற்றிரவு படுக்கையில் இருந்தபடி நான் என்ன நடந்தது என்ன யோசித்தேன் அங்கு என்ன நடந்தது என்பதே எனது கேள்வி நான் அணியின் ஓய்வறையில் அமர்ந்திருந்தபடி இந்த கேள்வியை கேட்டுக்கொண்டிருந்தேன் அங்கு கடும் மௌனத்தை கடைப்பிடித்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இலங்கையுடன் கைகுலுக்கவில்லை இலங்கை களத்தடுப்பை பூர்த்தி செய்த பின்னர் என்ன நடக்கப்போகின்றது என்பது எனக்கு தெரியும் அவ்வாறே நடந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பங்களாதேஸ் அணியின் வேகப்பந்து வீச்சு திறமைக்காக பாராட்டுகளை பெற்றுவரும் அலன்டொனால்ட் சஹீப் அல்ஹசனும் அணியின் வீரர்களும் நடந்துகொண்ட விதம்அணி பின்பற்றும் கொள்கைகளை வெளிப்படுத்தவில்லை எனவும் அலன்டொனால்ட் குறிப்பிட்டுள்ளார்.

நான் ஆடுகளத்திற்குள் சென்று போதும் நாங்கள் இவ்வாறான விடயங்களை ஏற்றுக்கொள்வதில்லை நாங்கள் இவ்வாறான விடயங்களை ஏற்றுக்கொள்ளும் அணியில்லை என சொல்ல நினைத்தேன் அதுவே உடனடியாக எனது சிந்தனையாக காணப்பட்டது என குறிப்பிட்டுள்ள அலன்டொனால்ட் நான் தலைமைப்பயிற்றுவிப்பாளர் இல்லை நான் அணிக்கு பொறுப்பாகவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மரைஸ் எரஸ்மஸ் அஞ்சலோ மத்தியுசை மைதானத்திலிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டதையும் அதன் பின்னர் மத்தியுஸ் தனது ஹெல்மெட்டை எடுத்துக்கொண்டு வெளியேறுவதையும் விளம்பரபலகைக்கு அருகில் அதனை எறிவதையும் பார்த்தேன் நான் ஆச்சரியமமைடந்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகின் மிகவும் அச்சமூட்டும் வேகப்பந்துவீச்சாளராக விளங்கிய அலன்டொனால்ட் இதுபோன்ற ஒரு சம்பவத்தை மீண்டும் பார்க்கவிரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்!