தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

Header Ads Widget

காதல் விவகாரத்தால்-பிக்குவின் கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உயிரிழப்பு!

பௌத்த பிக்கு ஒருவரின் கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்துள்ளார்.

தெனியாய பிரதேசத்தில் காதல் விவகாரத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கத்தியால் குத்திய 18 வயதுடைய பிக்குவை கைது சம்பவமொன்று கடந்த வியாழக்கிழமை (16) பதிவாகியுள்ளது.

காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர், சந்தேக நபரான பிக்குவின் சகோதரியுடன் காதல் தொடர்பில் இருந்துள்ளார்.

குறித்த பெண்ணை சந்திப்பதற்காக அவருடைய வீட்டிற்கு சென்றுள்ள போது சந்தேக நபரின் அழைப்பின் பிரகாரம் பல்லேகம கங்கொட வீதியில் அமைந்துள்ள சம்போதி முதியோர் இல்லத்திற்கு அருகில் சென்றுள்ளதாகவும், அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து மறைத்து வைத்திருந்த கத்தியால் பொலிஸ் உத்தியோகத்தரை குத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

காயமடைந்த 37 வயதுடைய கான்ஸ்டபிள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக தெனியாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.