மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட நாவற்காடு நாமகள் வித்தியாலய மாணவிகள் அகில இலங்கை கர்நாடக சங்கீத தேசிய மட்டப் போட்டியில் சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.
இதற்கமைய இடைநிலைப் பிரிவில் மு.கதுர்ஸ்ணா என்ற மாணவியும், மேற்பிரிவில் சி.மாதங்கி என்ற மாணவியும் முதலிடத்தைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களை மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப்பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன், பிரதிக்கல்விப் பணிப்பாளர் ந.குகதாசன் ஆகியோர் நேரடியாக பாடசாலைக்கு சென்று குறித்த மாணவர்களை பாராட்டி பரிசில் வழங்கி கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது!