தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

Header Ads Widget

இலங்கை பாடசாலை மாணவர்களை கண்காணிக்க புதிய புலனாய்வு பிரிவு!

நாட்டின் தேசிய புலனாய்வு பிரிவினருடன் இணைந்து புதிய சமூக புலனாய்வு பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு முறைகேடுகளை தடுக்க புதிய புலனாய்வு பிரிவினூடாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் பள்ளிகளில் போதைப்பொருள் மற்றும் தவறான செயல்களை குறைக்கவும், ஒழிக்கவும் முடியும் என நம்பிக்கை வெளியிட்ட அவர், இளைஞர்கள் மத்தியில் இருந்து தேசிய ஹீரோக்களை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்!