தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

Header Ads Widget

விடுதலை உத்தரவை நீதிமன்றம் வழங்கி ஒருவருடம்-ராஜீவ்காந்தி கொலையில் தண்டனை விதிக்கப்பட்ட நால்வர் இன்னமும் திருச்சி சிறப்பு முகாமில்!

இந்தியாவின் ராஜீவ்காந்தி படுகொலையில் தண்டனை விதிக்கப்பட்ட நால்வர் முன்கூட்டியே விடுதலையாகி  ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ள போதிலும் அவர்கள் தொடர்ந்தும் திருச்சி  சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு அவர்களை நாடு கடத்துவதற்கான உத்தரவு தாமதமாவதன் காரணமாகவே அவர்கள் தொடர்ந்தும் திருச்சி சிறப்பு முகாமிலிருக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது.

முருகன் சாந்தன் ஜெயக்குமார் ரொபேர்ட் பயஸ் ஆகிய நால்வரும் அவர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான உத்தரவு வெளிநாட்டவர்கள் பிராந்திய பதிவு அலுவலகத்திலிருந்து கிடைக்கும் வரை சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருப்பார்கள் என முகாமிற்கான பொறுப்பதிகாரியும் மாவட்ட கலெக்டருமான எம் பிரதீப் குமார் கடந்த வருடம் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வெளிநாட்டவர்கள் பிராந்திய பதிவு அலுவலகத்திலிருந்து இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என  அவர் தெரிவித்துள்ளார்.

எமற்கு அனுமதி கிடைத்ததும் நாங்கள் அவர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

முருகன் சாந்தனிற்காக ஆஜரான சட்டத்தரணி புகழேந்தி இது குறித்து கருத்து தெரிவிக்கையில் அவர்கள் விடுதலையான பின்னரும் இன்னமும் திருச்சி முகாமில் இருக்கவேண்டியதற்கான விசேட காரணங்கள் எதுவுமில்லை  என குறிப்பிட்டார்.

ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையர்கள் சில மாதங்களிற்கு முன்னர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் ஆனால் இவர்கள் விவகாரம் இன்னமும் தொடர்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான உத்தரவு தாமதமாவதை கண்டித்துள்ள  தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு கடந்காலங்களில் வெளிநாட்டவர்கள் பிராந்திய பதிவு  அலுவலகம் ஒரு நடைமுறை அமைப்பாக காணப்பட்டது ஆனால் தற்போது அது அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டவர்களை  சட்டபூர்வமாக அவர்களின் நாடுகளிற்கு திருப்பி அனுப்பவேண்டும் ஆனால் தெரிவிக்கப்படாத காரணங்களிற்காக இவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவது  தாமதமாகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

முருகன் தனது மகளுடன் வசிப்பதற்காக லண்டன் செல்ல விரும்புகின்றார்,சாந்தன் தனது தாயுடன் இலங்கையில் வசிக்க விரும்புகின்றார் ஏனைய இருவரும் நெதர்லாந்து செல்ல விரும்புகின்றார்கள் என தெரிவித்துள்ள  புகழேந்தி இந்த நால்வரும் பொலிஸாரின் 24 மணிநேர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

ஏன் அங்கு பொலிஸார் தேவை அவர்கள் சிறையில் அனுபவித்த கட்டுப்பாடுகளை விட சிறப்பு முகாமில்  கடும் கட்டுப்பாடுகளை அனுபவிக்கின்றனர் எனவும்  புகழேந்தி தெரிவித்துள்ளார்.

சிறப்பு முகாம் எங்கள் கட்டிடத்தின் அருகில் உள்ளது ஆயுதமேந்தி பொலிஸார் அதற்கு பாதுகாப்பு வழங்குகின்றனர் பொலிஸார் எங்கள் கட்டிடத்திற்குள் அனுமதியின்றி நுழைகின்றனர் முகாமின் சுவருக்கு அருகில் ஆறு பொலிஸார் பாதுகாப்பு பணியில் வழமையாக ஈடுபடுகின்றனர் அவர்கள் எங்கள் கட்டிடத்திற்குள் நுழைவதற்கு அனுமதியில்லை துப்பாக்கி தவறுதலாக வெடிக்கலாம் என நாங்கள் அச்சமடைகின்றோம் என திருச்சி சிறைத்துறை பயிற்சி பள்ளியின் துணைமுதல்வர் ஜே மோகன் குமார் தெரிவிக்கின்றார்.

எனினும் கலெக்டர் பிரதீப் குமார் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.நால்வரும் முகாமில் சுதந்திரமாக உள்ளனர்,முகாமில் உள்ள ஏனைய 56 பேரை போலவே இவர்களை நாங்கள் நடத்துகின்றோம் முகாமிற்கே நாங்கள் பொலிஸ் பாதுகாப்பை வழங்கியுள்ளோம் இவர்களிற்கு இல்லை என அவர்குறிப்பிட்டார்!

New indian express!