தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

Header Ads Widget

ஐ.சி.சி-தொடர்களில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி கட்டுப்பாடுகள் இல்லாத தடையை அறிவித்த ICC

உலக சர்வதேச கிரிக்கெட் பேரவையால் இலங்கை கிரிக்கெட் தடை செய்யப்பட்டுள்ள போதும் இலங்கை அணியின் எதிர்கால கிரிக்கெட் சுற்றுத்தொடர்கள் இன்று (29.11.2023) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தடை விதிக்கப்பட்ட போதிலும் போட்டிகளில் பங்குகொள்வதற்கும் நிதி உதவிகளை பெறுவதற்கும் முடியும் என்பதால் இந்த தடை ஒரு கட்டுப்பாடற்ற தடையாக கருதப்படுகின்றது. 

இலங்கை கிரிக்கெட் அணியின் 2024ஆம் ஆண்டுக்கான முதல் கிரிக்கெட் தொடரானது சிம்பாப்வே அணிக்கெதிராக மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று 20-20 போட்டிகளுடன் 2024 ஜனவரி மாதம் ஆரம்பிக்கவுள்ளது.

மேலும் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக ஜனவரி - பெப்ரவரி மாத இடையில் ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று ஒருநாள் மற்றும் மூன்று 20௨0 போட்டிகள் கொண்ட தொடர் ஒன்றில் இலங்கை அணி பங்கேற்கவுள்ளது.

20-20 உலகக்கிண்ண தொடர்!

இலங்கையில் நடைபெறவுள்ள இந்த இரண்டு அணிக்கெதிரான தொடர்களையும் நிறைவு செய்து விட்டு இலங்கை அணி, பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டு அனைத்து வகையான போட்டிகளையும் உள்ளடக்கிய தொடரொன்றில் பங்களாதேஷ் அணியுடன் மோதவுள்ளது.

அதனைத் தொடர்ந்து 2024ஆம் ஆண்டு ஜூன் - ஜூலை காலப்பகுதியில் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள 20௨0 உலகக்கிண்ண தொடரில் இலங்கை பங்கேற்கவுள்ளது.

உற்சாகமான ஆண்டு!
அதன் பிறகு இந்திய அணி ஜூலை மாதத்திலும் நியூசிலாந்து அணி செப்டம்பரிலும் மேற்கிந்தியத்தீவுகள் அணி ஒக்டோபர் மாதத்திலும் இலங்கைக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் 2024ஆம் ஆண்டு இறுதியில் தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் கலந்துகொள்ளவுள்ள இலங்கை அணி இங்கிலாந்து அணிக்கெதிராக விளையாடுவதற்கு ஆகஸ்ட் - செப்டம்பர் மாத காலப்பகுதியில் இங்கிலாந்துக்கு பயணப்படுகின்றது.

எங்கள் அணி ஆண்டு முழுவதும் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெற உள்ளதால் எதிர்வரும் ஆண்டு எங்களுக்கு மிகப்பெரும் உற்சாகத்தை அளிக்கும் என இலங்கை கிரிக்கெட் சபையின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்!