மட்டு வவுணதீவு பிரதேசத்தில் பாடசாலைக்கு வீதியால் சென்ற மாணவர்கள் மீது பணை மரத்தில் இருந்த குளவி தாக்குதலில் 8 மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
குறித்த சம்பவம் இன்று புதன்கிழமை (08) காலை 7.00 மணியவில் இடம்பெற்றுள்ளது.
குறிஞ்சாமுனை பகுதியில் பனைமரத்தில் கூடுகட்டியுள்ள குளவிகள் வீதியால் நடந்து சென்ற மாணவர்களை தாக்கியுள்ளது.
இந்நிலையில், 8 மாணவர்கள் அருகிலுள்ள தாண்டியடிபிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்த குளவி கூடுகட்டியுள்ள பனை மரங்களில் இருந்து கூடுகளை அகற்றும் நடவடிக்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்!