நிர்ணய விலைக்கு மாத்திரமே சீனியை விற்பனை செய்ய வேண்டும் எனவும், அதற்கு மேல் சீனி விற்பனை செய்பவர்களை நுகர்வோர் சேவை அதிகார சபை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது நாட்டில் உள்ள சீனி கையிருப்புகளின் விலை உயர்வதைத் தடுப்பதற்காக சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டது.
மேலும், இம்முறை, முன்பைப் போல் அல்லாமல், பொதி செய்யப்பட்ட சீனிக்கும் அதே அதிகபட்ச சில்லறை விலையே விதிக்கப்படும் . அதே போல் யாரும் தேவையற்ற லாபம் ஈட்ட நான் அனுமதிக்க மாட்டேன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.!