தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

Header Ads Widget

தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபி நீதிமன்ற உத்தரவுடன் நேற்று இடிப்பு!

மட்டு தரவை மாவீரர் இல்லத்தில் அமைக்கப்பட்டு வந்த நினைவுத் தூபியை பொலிஸார் நேற்று வியாழக்கிழமை (23) சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுவருவதாக நீதிமன்ற உத்தரவுடன் சென்று அந்த நினைவு தூபியை இடித்து தள்ளியுள்ளனர். 

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள தரவை  மாவீரர்  துயிலும் இல்லத்தில் நினைவு தூபி ஒன்றை  மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கல்லால் அமைத்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த நினைவு தூபி அனுமதி எதுவும் பெறாமல் சட்டவிரோதமாக கட்டப்பட்டு வருவதாக இதனை உடன் அகற்றுமாறு கோரி பொலிஸார் வாழைச்சேனை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததையடுத்து நீதிமன்றம் உடன் இதனை அகற்ற உத்தரவு பிறப்பித்தது. 

இந்த நீதிமன்ற உத்தரவுடன் நேற்று காலை தரவை மாவீரர் இல்லத்துக்குள் நுழைந்த பொலிஸார் அந்த நினைவு தூபியை இடித்து தள்ளி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது!