இந்தியாவிலிருந்து மலையக மக்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 வருடங்கள் பூர்த்தியாண்டைக் கொண்டாடும் முகமாக நாம் 200 தேசிய நிகழ்வானது நேற்று வியாழக்கிழமை (2) கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இந்திய அரசியல்வாதிகள் மற்றும் வெளிநாட்டு தூதுவர்களின் பங்கெடுப்புடன் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு வருகை தந்த இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திருகோணமலைக்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டார். திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்ட அவர் வரலாற்று தொன்மைமிக்க திருக்கோணேச்சர ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் ஆலயம் சார்ந்தோரையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போதே அகில இலங்கை இந்துமாமமன்றத்தின் உப தலைவரும் சிவபூமி அறக்கட்டளையின் தலைவருமான ஆரு திருமுருகன் குறித்த கோரிக்கையை இந்திய நிதியமைச்சரிடம் முன்வைத்தார்!
குறிப்பாக தொன்மை மிக்க இவ்வாலயம் தொடர்பில் மக்கள் மிகுந்த கவலையுடனுள்ளதாகவும், கடந்த காலத்தில் இந்திய அரசின் நிதி உதவியுடன திருககேதீச்சர ஆலயமானது கருங்கல்லினால் புனரமைக்கப்பட்டதைப் போல் திருக்கோணேச்சர ஆலயத்தையும் புனரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கையை முன்வைத்தார்!