அம்பாறை பெரிய நீலாவணையினைச் சேர்ந்த திருமதி. வாசுகி ஐங்கரன் இலங்கை அதிபர் சேவையில் இணைந்து கொண்டார். இவருக்கான நியமனக் கடிதம் கடந்த 06.11.2023 கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்ற நியமனம் நிகழ்வில் வழங்கப்பட்டது.
வாசுகி ஐங்கரன் தனது ஆரம்பக் கல்வியினை கமு/நிந்தவூர் அல்மஸ்லம் வித்தியாலயம், கமு/பெரியநீலாவணை சரஸ்வதி வித்தியாலயத்திலும் கற்று தரம் 6 தொடக்கம் உயர்தரம் வரை கமு/கமு/ கார்மேல் பற்றிமா கல்லூரியிலும் பயின்றார்.
பின்னர் மட்டக்களப்பு கல்வியற் கல்லூரியில் விஞ்ஞானம் பாடத்தில் பயிற்சி பெற்ற இவர் கமு/நற்பட்டிமுனை சிவசக்தி வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆசிரியராக முதல் நியமனத்தைப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து மட்/பட்/பட்டிருப்பு தேசிய பாடசாலையிலும், கமு/கமு/ கார்மேல் பற்றிமா கல்லூரியிலும் கடமையாற்றி தற்போது கமு/கமு/ கார்மேல் பற்றிமா கல்லூரியில் அதிபர் சேவையில் இணைந்து கொண்டார்!