தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

Header Ads Widget

வவுணதீவில் மாவீரர்களுக்கு விளக்கேற்றிய நால்வர் அதிரடிக் கைது!

மட்டு வவுணதீவு பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் மாவீரர்களுக்கு விளக்கேற்றிய நால்வரை வவுணதீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை இன்றையதினம் (27.11.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு மாவட்ட அமைப்பாளர் அவரது மனைவியான மகளீரர் அமைப்பாளர், அவரது மகன் மற்றும் கொடிகளை வாகனத்தில் எடுத்துச் சென்றவர் உட்பட 4 பேரை கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்!

இலங்கை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லத்தை அலங்கரிப்பதற்கா மட்டக்களப்பு நகரில் இருந்து பட்டா ரக வாகனத்தில் பொருட்களை எடுத்துச் சென்ற நிலையில் அந்த பகுதியில் நடமாடும் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் குறித்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது அங்கு சிவப்பு மஞ்சல் கொடிகள் மற்றும் கம்பிகள் இருப்பதை கண்டு வாகன சாரதியை கைது செய்ததுடன் வாகனத்தையும் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவட்ட அமைப்பாளர் குககுலராஜா (குகன்) அவரது மனைவியான மகளீர் அமைப்பாளர், மகன் ஆகியேர் பொலிஸ் நிலையம் சென்று கைது செய்யப்பட்ட சாரதியை பார்த்துவிட்டு 6 மணியளவில் பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் வீதியில் மாவீரர்களுக்கு விளக்கேற்றயதையடுத்து பின்னர் அவர்கள் 3 பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் கைது செய்தவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்!