தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

Header Ads Widget

நேற்றைய இலங்கையின் படுதோல்விக்கான - விளக்கத்தை கோரியுள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் பேரவை!


உலகக் கிண்ண போட்டியில் இலங்கை அணியின் தோல்வி குறித்து ஸ்ரீலங்கா கிரிகெட்  அவசர விளக்கத்தை கோரியுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான நடப்பு உலகக் கிண்ண போட்டியில் இலங்கை கிரிகெட் அணியின் செயற்பாடு குறித்து தேசிய அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் தேர்வாளர்களிடம் இருந்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் அவசர விளக்கத்தை கோரியுள்ளது.

நேற்று வியாழக்கிழமை (02) இடம்பெற்ற இந்தியாவுடனான போட்டியில் தோல்வியடைந்திருந்தது. அத்துடன் உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணி  7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. 

இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்ததோடு ஸ்ரீலங்காக கிரிக்கெட் அதிருப்தியடைந்துள்ளது.

அவசர விளக்கத்தை கோரியுள்ளதற்கான காரணம்  கிரிகெட் அணியின்  தோல்வியின் பின்னால் உள்ள காரணங்களைப் புரிந்துகொண்டு அணியின் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே ஆகும் என ஸ்ரீலங்கா கிரிகெட் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா கிரிகெட் விடுத்துள்ள விளக்க கோரிக்கையில் சில முக்கிய பதில்கள் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. போட்டிகளின் போது அணியின் உத்திகள், தயார்படுத்தல்கள் மற்றும் முடிவுகள் பற்றி விளக்குதல்.

2. ஒவ்வொரு போட்டிக்கும் வீரர்களின் தேர்வுகளை நியாயப்படுத்துதல் மற்றும்  வீரர்களின் மாற்றங்கள் தொடர்பில் விளக்குதல்.

3. வீரர்களின் உடல், உள ரீதியான பிரச்சினைகள் மற்றும் செயல்திறன் குறித்து விளக்குதல்.

4. போட்டி பகுப்பாய்வுகளைப் பகிர்ந்து கொள்வது மற்றும் போட்டியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து விளக்குவது.

போன்ற கோரிக்கைகளை ஸ்ரீலங்கா கிரிகெட் நிறுவனம் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது!