தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

Header Ads Widget

இலங்கையில் இன்றும் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் மழை பெய்யும்!

இலங்கையின் பெரும்பாலான மாகாணங்களின் பல  இடங்களில் பிற்பகல் ஒரு  மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்ததார்.

இன்றைய வானிலை குறித்து மேலும் அவர் கூறுகையில், 

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் ஊவா  மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

வடக்கு, கிழக்கு மற்றும் தென்  மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும். 

மத்திய, சப்ரகமுவ, மேல்  மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பாடு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

நாட்டை சூழ உள்ள கடல்  பிராந்தியங்களின் பல இடங்களில் குறிப்பாக பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.  

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து அல்லது  மாறுபட்ட திசைகளில் இருந்து  காற்று வீசும். 

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். 

ஆனால்  இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்!